கோவை மாவட்டம் காந்திபுரம் 100 அடி சாலையில் உள்ள ஜாய் ஆலுக்காஸ் தங்க நகை கடையில் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கோவை துணை ஆணையர் சண்முகம் தலைமையில் போலீசாருடன் சம்பவ இடத்திலேயே விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இங்கு 25 கிலோ எடை உள்ள தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளன. இதற்காக காவல்துறை 5 தனி படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. மேலும் நகைக்கடை ஊழியர்களுடன் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சி சி டி கேமராக்களின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது . சி சி டி கேமராக்களின் காட்சிகள் அடிப்படையில் கொள்ளையர்கள் விரைவில் பிடிபடுவர் என்ற தகவலை அம்மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது..