கோவையில் நான் புதல்வன் திட்டத்தினைத் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். இத்திட்டத்தின் மூலம் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதம்தோறும் 1000 ரூபாய் வழங்கப்பட உள்ளது .
இத்திட்டத்தினைச் செயல்படுத்த ரூபாய் 360 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. நான் புதல்வன் திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் 3.28 லட்சம் மாணவர்கள் பயனடையவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.