கோவை மாவட்டத்தில் தமிழ் எழுத்துக்களால் உருவாக்கப்பட்ட பிரம்மாண்டமான 20 அடி திருவள்ளுவர் சிலை வடிவமைக்கப்பட்டு வருகிறது.ஸ்மார்ட் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் நகரமாக்குதல் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் ஒரு பகுதியாக மத்திய மாநில அரசுகள் பங்களிப்புடன் கோவை மாநகராட்சியானது1000 கோடி ரூபாய் மதிப்பில் தனது பணிகளைச் செய்து வருகிறது. இந்நிலையில் கோவை குறிச்சி குளங்கரையில் தமிழ் எழுத்துக்களால் 20 அடி திருவள்ளுவர் சிலை மிகப் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டு வருகிறது. இந்தத் திருவள்ளுவர் சிலை ஸ்டீலால் உருவாக்கப்பட்டு மழையும், வெயிலும் தாங்கக்கூடிய தன்மை கொண்டதாக அமையப்பெற்றுள்ளது.
இந்தத் திருவள்ளூர் சிலையில் 3000 தமிழ் எழுத்துக்கள் அமையப்பட்டுள்ளன. மேலும் திருவள்ளுவர் நெற்றியில் அறம் என்ற எழுத்து இடம் பெற்றுள்ளது.திருவள்ளுவர் சிலை காலை மாலை நேரங்களில் வண்ண விளக்குகளால் ஒளிரும் வகையில் வடிவமைக்கப்பட்டு பார்வையாளர்களுக்கு அழகாக காட்சியளிக்கிறது. இந்த 20 அடி திருவள்ளுவர் சிலை விரைவில் திறக்கப்பட உள்ளதாக கோவை மாநகராட்சி தெரிவித்துள்ளது.பொதுமக்கள் திருவள்ளுவர் சிலை எப்போது திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு டன் உள்ளனர்.