கோடை விடுமுறை நீட்டிப்பு – அமைச்சர் அன்பில் மகேஷ் அறிக்கை!

கோடை விடுமுறை நீட்டிப்பு – அமைச்சர் அன்பில் மகேஷ் அறிக்கை!

மாணவர்கள் உற்சாகம் கோடை விடுமுறை நீட்டிப்பு.   ஜூன் ஏழாம் தேதி பள்ளிகள்   திறக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.வெயிலின் காரணமாக பள்ளிகளுக்கான கோடை விடுமுறை நீட்டிப்பு எனத் தமிழக அரசு முடிவு செய்துள்ளது.  ஜூன் ஒன்றாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் பள்ளிகள் திறப்பு தேதி மாற்றப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்த நிலையில்  பள்ளிகளின் திறப்புக்கான தேதி ஒத்திவைப்பு பற்றி பல்வேறு தரப்பினர் கோரிக்கைகள் முன் வைத்திருந்தனர். இதன் அடிப்படையில் அமைச்சர் அன்பில் மகேஷ் மாவட்ட கல்வி அலுவலர்கள் உடன் ஆலோசனை மேற்கொண்டு முதல்வரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

எனவே முதல்வரின் ஆணைக்கிணங்க மாணவர்களின் உடல் நலத்தினை  கருத்தில்கொண்டு தமிழ்நாட்டில் வருகிற ‘ஜூன் 7 தேதி ஒட்டு மொத்த பள்ளிகள் அனைத்தும் திறக்கப்படும்’ என அமைச்சர் அன்பில் மகேஷ் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.  கோடை விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு பாடம் நடத்துவதைத் தவிர்க்க வேண்டும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் மாணவர்களுக்கான ஆங்கில பயிற்சி, நீச்சல் மற்றும் விளையாட்டு போன்ற திறமைகளை வளர்த்துக் கொள்ள கோடை விடுமுறை நாட்கள் பயன்பட வேண்டும்   என அமைச்சர் அன்பின் மகேஷ் வேண்டுகோள்  வைத்துள்ளார். எனவே கோடை விடுமுறை நீட்டிப்பு காரணமாக பள்ளி மாணவர்கள் மிகுந்த உற்சாகமாக உள்ளனர்.

Related post

காலாண்டு விடுமுறை அக்டோபர் 6 வரை நீட்டிப்பு தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

காலாண்டு விடுமுறை அக்டோபர் 6 வரை நீட்டிப்பு தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் செப்டம்பர் 28ம் தேதி முதல் அக்டோபர் 2ஆம் தேதி வரை 5 நாட்கள் விடுமுறை விடப்படுகிறது. 5 நாட்களிலும் எவ்வித சிறப்பு…
தமிழகத்தில் ஜூன் 10-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் –  பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

தமிழகத்தில் ஜூன் 10-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

 தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் ஜூன் 10ஆம் தேதி திறக்கப்படும். கோடை விடுமுறைக்கு பிறகு ஜூன் மாதத்தின் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படுவது வழக்கம் இந் நிலையில் வெயிலின்…
தேர்வு  முடிவுகளுக்குப் பின் பள்ளிகள் திறக்கப்படும் பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!

தேர்வு முடிவுகளுக்குப் பின் பள்ளிகள் திறக்கப்படும் பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!

நாடாளுமன்ற தேர்தல் காரணமாக பள்ளி தேர்வுகள் மிக வேகமாக நடைபெற்று முடிந்துள்ளன. இந் நிலையில் 4 முதல் 9 வகுப்புகளுக்கான ஆண்டுத் தேர்வு ஏப்ரல் 22,23 ஆம் தேதிகளில்…