பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா’ திட்டத்தின் கீழ், ஏழ்மையில் உள்ள குடும்பத்தினருக்கு இலவச காஸ் இணைப்பு வழங்கப்படுகின்றன. மேலும்பயனாளிகளுக்கு கூடுதல் மானியம் வழங்கப்படுகிறது.தமிழகத்தில், 41 லட்சம் இலவச திட்ட பயனாளிகள் உட்பட 2.33 கோடி காஸ் சிலிண்டர் வாடிக்கையாளர் உள்ளனர். இலவச சிலிண்டர்களுக்கு மட்டும் கைரேகை பதிவு கட்டாயம் என்று முன்னதாக தெரிவிக்கப்பட்டிருந்தது இந் நிலையில் இந்தியன் ஆயில் பாரத் இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய பொதுத்துறை நிறுவனங்களுக்கும் நிறுவனங்களும் வீடுகளுக்கான சமையல் கேஸ் சிலிண்டர்களுக்குக் கைரேகை பதிவு கட்டாயம் எனத் தெரிவித்துள்ளனர்.
வாடிக்கையாளர்களின் உண்மை தன்மையை சரிபார்க்க அவர்களின் கைவிரல் ரேகை பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது இதற்கான பணியை நிறுவனங்கள் தொடங்கி வருகின்றன எனவே வாடிக்கையாளர்கள் கைரேகைகளை ஏசஸ் ஏஜென்சி நிறுவனத்திற்குச் சென்று பதிய வேண்டும் எனந் தெரிவிக்கப்பட்டுள்ளது