கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவிலில் நினைப்புத்தரிசி பூஜை இன்று நடைபெறுகிறது. அதற்காக நேற்று மாலை கோயில் நடை திறக்கப்பட்டுள்ளது. நாட்டில் வறுமை நீங்க விவசாயம் செழிப்பதற்காக இந்த பூஜை நடத்தப்படுகிறது.பாலக்காடு மற்றும் அச்சன்கோவில் ஆகிய இடங்களிலிருந்து நெற்கதிர்கள் கொண்டுவரப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும் அதன் பிறகு ஐயப்பனுக்குச் சிறப்பு நெய் அபிஷேகங்கள் நடைபெற்று பிறகு நெற்பயிர்கள் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும்.
தொடர்ந்து வழக்கமான பூஜைகளுக்குப் பின்னர் இன்று இரவு 10 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும். மீண்டும் ஆவணி மாத பூஜைகளுக்காக வரும் ஆகஸ்ட் 16ஆம் தேதி சபரிமலை கோயில் நடை திறக்கப்படும். நிறைப்புத்தரிசி பூஜையை முன்னிட்டு சபரிமலையில் ஏராளமான பக்தர்களின் கூட்டம் காணப்படுகிறது.