இந்திய- வங்காளதேச எல்லை வேலிகளில் தேனீக்கள் வளர்க்கப்படுகின்றன. இந்திய மேற்கு வங்காள எல்லைப் பகுதிகளில் தங்கம் ,வெள்ளி, போதை பொருள் கடத்துதல் போன்ற சட்டவிரோத செயல்கள் அதிகளவில் நடைபெறுகின்றன. மேலும் இந்த எல்லைகளை தகர்த்து பலர் இந்திய எல்லைக்குள் புகுந்து பல திருட்டு செயல்களில் ஈடுபடுகின்றனர். இதை தடுப்பதற்காக தேனீ வளர்க்கும் புதிய வியூகத்தை (பி எஸ் எஃப் )பாதுகாப்பு படையினர் கொண்டு வந்துள்ளனர். இந்திய வங்கதேசத்தின் நாடியா மாவட்டத்தில் நவம்பர் 2-ம் தேதி முதல் தேனிகள் கூடுகள் வங்காள எல்லை வேலிகளில் தேனீக்கள் கூடுகள் வளர்க்கும் பணியினை எல்லை பாதுகாப்பு படையினர் துவக்கி உள்ளனர்.
இதன் மூலம் பல குற்றவியல் செயல்கள் தடுக்கப்படும் எனப் பி எஸ் எப் தலைமை அதிகாரி சுஜித் குமார் தெரிவித்துள்ளார். மேலும் தேனீக்கள் கூடுகள் வளர்ப்பதன் மூலம் உள்ளூர் கிராம வளர்ச்சிக்கு வாழ்வாதாரம் உதவும் வகையில் தேனீக்கள் வளர்ப்பு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என்றும் பி எஸ் எஃப் பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.