காவிரி நதிநீர் தொடர்பாக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் டெல்லி பயணம்!

காவிரி நதிநீர் தொடர்பாக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் டெல்லி பயணம்!

 நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் டெல்லி பயணம்! தமிழ்நாட்டிற்கும் கர்நாடகாவிற்கும் நீண்ட நாட்களாக காவிரி நீர் வரத்து மேகதாது அணை கட்டுவது தொடர்பாக பிரச்சனை நிலவி வருகிறது. தற்போது காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது எனும் பகுதியில் அணை கட்ட கர்நாடக அரசு முயற்சித்து வருகிறது. மேலும் கர்நாடகாவின் நீர்வளத்துறை அமைச்சர் தமிழகத்திற்கு நீரை வழங்க முடியாது மேகதாது அ ணை யை கட்டியே தீர்வோம் எனத் தெரிவித்திருந்தார். இதன் காரணமாக காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக நேற்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனிடம் ஆலோசனை  நடத்தினார்.

 தமிழக அரசின் சார்பாக நீர்வளத்துறை செயலாளர் துரைமுருகன்  சக்சேனா காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்திற்கு கடிதம் எழுதி இருக்கிறார்.  அக்கடிதத்தில் தமிழகத்தில் “ஜூன் மாதம்     9. 20 டி.எம்.சி தண்ணீரும், ஜூலை மாதத்தில் 31.24 டி.எம்.சி தண்ணீரும் கர்நாடகா அரசு வழங்க வேண்டும் ,ஆனால் ஜூன் மாதத்தில் வெறும்2.7 டி.எம்.சி தண்ணீர் மட்டுமே திறந்து விடப்பட்டது. எனவே காவிரியிலிருந்து தமிழகத்திற்கு ஜூலை மாதத்தில் திறக்க வேண்டிய தண்ணீரை கர்நாடகா அரசு  வழங்க வேண்டும் என்பதை மத்திய அரசு உறுதி அளிக்க வேண்டும் ,” என்று தெரிவித்துள்ளார்.  தமிழகத்தின் விவசாய தொழிலுக்கான நீர் பாசன வசதிக்கு தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது..

Related post

டெல்லியில் குடிநீரை வீணாக்கினால் 2000 ரூபாய் அபராதம்!

டெல்லியில் குடிநீரை வீணாக்கினால் 2000 ரூபாய் அபராதம்!

டெல்லியில் குடிநீரை வீணாக்கினால் ரூபாய் 2000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஹரியானா மாநிலத்தில் உள்ள யமுனை ஆற்றிலிருந்து டெல்லியில் வாழும் பொது மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. தற்போது யமுனை…
90 ஆவது காவிரி மேலாண்மை குழுக்கூட்டம் இன்று ஆலோசனை!

90 ஆவது காவிரி மேலாண்மை குழுக்கூட்டம் இன்று ஆலோசனை!

டெல்லியில் இன்று 90- ஆவது காவிரி மேலாண்மை குழுக் கூட்டம் இன்று காணொளி வாயிலாக நடைபெறுகிறது. இந்த காவிரி மேலாண்மை குழு கூட்டத்தின் தலைவர் வினித் குப்தா தலைமையில்…
டெல்லியில் காற்றின் தரக்குறைவால் மக்கள் அவதி!

டெல்லியில் காற்றின் தரக்குறைவால் மக்கள் அவதி!

கடந்த நாட்களாக டெல்லியில் காற்றின் தரம் மிக மோசமாக பாதிப்படைந்து வருகிறது. டெல்லியில் வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வெளிவரும் கழிவுகளால் காற்றின் தரம் பாதிப்படைந்து. இதனால் ஆஸ்துமா…