இந்தியாவில் 2015 ஆம் ஆண்டிலிருந்து 2023 ஆண்டு வரை காசநோய் பாதிப்பு குறைந்துள்ளது.இந்தியாவில் மக்களிடையே 17.7 சதவீதம் காசநோய் பாதிப்பு குறைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டா வெளியிட்டுள்ளார். காசநோய்க்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவின் முன்னேற்றத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
காசநோயை ஒழிப்பதில் இந்தியா மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு அங்கீகாரம் அளித்து பிரதமர் திரு நரேந்திர மோடி, காசநோய் பாதிப்பைக் குறைப்பதில் நாடு அடைந்துள்ள சாதனைகளைப் பாராட்டி காசநோய் இல்லாத இந்தியாக தொடர்ந்து பணியாற்றுவோம் எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.