உலகில் பிரம்மாண்டமான ஜல்லிக்கட்டு மைதானத்தை ( ஜனவரி 24.2024 )இன்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் கீழங்கரையில் 62.72 கோடி செலவில் 66 ஏக்கரில் மிகப் பிரம்மாண்டமாக ஜல்லிக்கட்டு மைதானம் கட்டப்பட்டுள்ளது . இதற்கு ‘கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கம்’ எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்த ஜல்லிக்கட்டு மைதானம் போட்டியிடும் காளைகளுக்கான, மாடுபிடி வீரர்களுக்காகவும் சகல வசதிகளுடன் ,5000 பேர்கள் அமரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. உலகில் மிகப் பெரியதான மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மைதானம் இன்று காலை 10 மணியளவில் தமிழக முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்டு போட்டிகளும் நடத்தப்பட்டு வருகின்றன,அதற்கான பரிசுகளும் வழங்கப்பட்டு வருகின்றன. மதுரையில் அலங்காநல்லூரில் அமைக்கப்பட்டுள்ள ‘கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தை அனைத்து தமிழர்களும் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.