கர்நாடகாவில் இருந்து திறந்துவிடப்பட்ட காவிரி நீர் தமிழ்நாட்டுக்கு வருகை. கர்நாடகாவிலிருந்து திறந்துவிடப்பட்ட காவிரி நீர் மேட்டூர் அணையில் 20,000 கன அடி அதிகரித்து தமிழ்நாட்டுக்கு வந்தடைந்துள்ளது. தென்மேற்கு பருவமழையால் கர்நாடக மாநிலத்தில் உள்ள குடகு, தலைகாவிரி, ஷிமோகா, மைசூர், மாண்டியா போன்ற இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடகாவின் ஹாராங்கி, ஹேமாவதி, கிருஷ்ணராஜா சாகர், கபினி உள்ளிட்ட அணைகளில் அதன் கொள்ளளவை எட்டி வேகமாக நீர் நிரம்பி வருகிறது
இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு திறக்கப்படும் நீரின் அளவு 13983 கன அடியிலிருந்து,17688 கன அடியாக அதிகரித்து இன்று மாலை 20,000 கன அடியாக மேட்டூர் அணையில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கர்நாடகா – தமிழ்நாடு எல்லைக்குள் பிலிகுண்டா வழியாக ஒகேனக்கலில் அருவி நீர் நிரம்பி வழிகிறது. மேலும் மேட்டூர் அணையின் நீர்மட்டம் அதிகரித்து வருவதால் தமிழ்நாட்டின் விவசாயிகள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர்!