கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்குத்தொகையை தமிழக அரசு வழங்குகிறது .

கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு  ஊக்குத்தொகையை  தமிழக அரசு வழங்குகிறது .

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகையை தமிழக அரசு வழங்குகிறது.. கரும்பு விவசாயிகளுக்கான ரூபாய் 253.70 கோடி ஊக்கத்தொகை வழங்குவதாக தமிழக அரசாணையில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பினை தமிழக வேளாண் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். கரும்பு சாகுபடி உற்பத்தியில் சர்க்கரை ஆலைகளுக்கு அரவை பருவத்திற்காக கரும்பு பதிவு செய்து வழங்கிய விவசாயிகளுக்கான சிறப்பு ஊக்கத்தொகையை தமிழக அரசு வழங்குகிறது.

கரும்பு உற்பத்தியை அதிகரிக்கவும் , நலிவடைந்த சர்க்கரை ஆலைகளுக்கான சர்க்கரையை உற்பத்தியை அதிகரிக்கவும், மேலும் சர்க்கரை ஆலைகளில் 2022- 23 ஆண்டுகளில் அரவை பருவத்திற்காக கரும்பு வழங்கிய விவசாயிகளுக்காக சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதனால் சுமார் 1.42 லட்சம் கரும்பு விவசாயிகள் பயனடைவர் என்று வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

Related post

ஜெயம் ரவியின் பிரதர்ஸ் திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸ்!

ஜெயம் ரவியின் பிரதர்ஸ் திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸ்!

நடிகர் ஜெயம் ரவியின் பிரதர்ஸ் திரைப்படம் தீபாவளி தினத்தன்று ரிலீஸ்! பிரதர்ஸ் திரைப்படத்தை எம். ராஜேஷ் இயக்கியுள்ளார்.இந்தத் திரைப்படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார்.சரண்யா பொன்வண்ணன், பூமிகா, விடிவி…
தீபாவளியை முன்னிட்டு சென்னையில் முழுவதும் மக்கள் ஷாப்பிங்!

தீபாவளியை முன்னிட்டு சென்னையில் முழுவதும் மக்கள் ஷாப்பிங்!

 சென்னை தி.நகர், ரங்கநாதன் தெருவில் ஜவுளி கடைகளில் புதிய ஆடைகள், வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க மக்கள் திரண்டனர். அதேபோல சென்னை தீவுத்திடலில் அமைக்கப் பட்டுள்ள பட்டாசு கடைகளில்…
தீபாவளியை முன்னிட்டு சென்னையில் சிறப்பு பேருந்துகள் மற்றும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன!

தீபாவளியை முன்னிட்டு சென்னையில் சிறப்பு பேருந்துகள் மற்றும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன!

தமிழகத்தில் தீபாவளி பண்டிகை (அக்டோபர் 31 )வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகையை அடுத்து வெள்ளி ,சனி, ஞாயிறு விடுமுறை நாட்கள் வருவதால் மக்கள் சொந்த ஊர் செல்வதற்காக சிறப்பு…