ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் கடிதம். அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த உணவு மற்றும் பொது விநியோகத் துறை மத்திய அமைச்சர் பியூஸ் கோயலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தப்படும் உணவுப் பொருட்கள் அரிசி ,கோதுமை ,துவரம், பருப்பு, உளுத்தம் பருப்பு ,தக்காளி மற்றும் காய்கறிகள் விலை உயர்வு விண்ணை தொடும் அளவிற்கு அதிகரித்துள்ளது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தினர் பெரும்பளவு பாதிப்படைந்துள்ளனர்.
எனினும் கூட்டுறவு விற்பனை நிலையங்கள் மற்றும் உழவர்கள் சந்தைகள் மூலம் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டு நியாய விலைகள் கடைகள் மூலம் குறைந்த விலையில் மக்களுக்கு விற்பனை செய்யும் நடவடிக்கையை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் மக்களின் பயன்பாட்டிற்காக மாதம் பத்தாயிரம் மெட்ரிக் டன் கோதுமை, துவரம் பருப்பு ஆகியவற்றை ஒன்றிய அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும், மேலும் இதற்கான நடவடிக்கைகளை விரைந்து தலையிடுமாறு மத்திய அமைச்சர் பீயூஸ் கோயலுக்கு தமிழக முதலமைச்சர் கடிதம் எழுதி உள்ளார்.