முன்னாள் முதலமைச்சரும்,தி.மு.க தலைவரும்,முத்தமிழ் அறிஞருமான கலைஞர் கருணாநிதி அவர்களின் பாடங்கள் வரும் கல்வியாண்டில் ஒன்பதாம் வகுப்பு பாடப் புத்தகத்தில் “செம்மொழியான தமிழ்மொழி” எனும் தலைப்பில் இடம்பெறும் எனச் சட்டப்பேரவையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்தார். முத்தமிழறிஞர் கருணாநிதி அவர்கள் “தமிழில் சிறந்த எழுத்தாளராகவும், பத்திரிகையாளராகவும், சிறந்த பேச்சுத்திறமை கொண்டவராகவும் மேலும் தமிழ் மொழிக்குப் பல நற்பணிகளையும் பங்களிப்பையும் செய்துள்ள இவர் தமிழ் மொழிக்காகத் தன்னையே அர்ப்பணித்தவர்.
கோயம்புத்தூரில் நடைபெற்ற உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் “செம்மொழியாம் தமிழ் மொழி” என்ற வாழ்த்துப் பாடலை எழுதிய சிறப்புக்குரியவர். இதனைத் தொடர்ந்து அடுத்த தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில ‘தமிழுக்கும் அமுதென்று பேர், சங்ககால தமிழ், முத்தமிழறிஞர் கலைஞர்.மு.கருணாநிதி’ பற்றிய பாடக் குறிப்பு பாடப் புத்தகத்தில் இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் வரும் கல்வியாண்டில் புத்தகங்கள் மாணவர்கள் பயிலும் வகையில் அச்சடிக்கப்பட்டு வருகின்றது . இந்நிலையில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு கலைஞரின் தமிழ் பங்களிப்பு குறித்து பாடம் மாணவர்களின் பள்ளி புத்தகத்தில் இடம் பெறுவது போற்றுதற்குரியது. எங்கும் தமிழ் எதிலும் தமிழ் வாழ்க!