சமீபமாக ட்விட்டரின் எனப்படும் நிறுவனத்தை கைப்பற்றனார் எலான் மஸ்க். அதன் பிறகு ட்விட்டர் எனப்படும் பெயரை எக்ஸ் எனப் பெயரிட்டு மாற்றம் செய்தார். இதைத் தொடர்ந்து பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டு வந்த எலான் மஸ்க் முன்னதாகவே ஆடியோ மற்றும் வீடியோ கால் செய்வதற்கான தொழில்நுட்ப பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று அறிவித்தார். இதற்கான தொழில்நுட்ப பணி நிறைவேறிய நிலையில் எக்ஸ் தளத்தில் இனி ஆடியோ மற்றும் வீடியோ கால் அழைப்பு செய்வதற்கான வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
மேலும் இதற்கு பயனர்கள் தங்களின் அமைப்பில் சென்று Go to Settings > Privacy & Safety > Direct Messages > Enable Audio & Video Calling வீடியோ கால் வசதியை செயல்பட அனுமதி வழங்கினால், பயனர்கள் தங்களின் செல்போனில் ஆடியோ மற்றும் வீடியோ கால் அழைப்புகளை பெறலாம் என்று எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.