ஊத்துக்கோட்டை பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலில் ஆடி மாத திருவிழா இன்று முதல் ஆரம்பம்!

ஊத்துக்கோட்டை பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலில் ஆடி மாத திருவிழா இன்று முதல் ஆரம்பம்!

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலில் ஜூலை 17ஆம் தேதி முதல் ஆடி திருவிழா கொண்டாடப்படுகிறது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு இக்கோயிலில் கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. இதைத் தொடர்ந்து ஆடி மாத திருவிழாவானது 14 வாரங்கள் நடைபெறும். இந்த மாதத்தில் பெரியபாளையத்தம்மன் கோவிலில் சனிக்கிழமைகளில் பக்தர்கள் வருகை தந்து இரவு தங்கியிருந்து மறுநாள் காலை பொங்கல் வைத்து, மொட்டை அடித்து, வேப்பஞ்சலை அணிந்து, ஆடு வெட்டி அம்மனை வழிபடுவர்.

எனவே பெரியபாளையத்தம்மன் கோயிலில் சென்னை, காஞ்சிபுரம், ஆந்திரா எனப் பல வெளியூர்களிலிருந்தும் கோடிக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். இக்கோயிலில் கூட்ட நெரிசல் காரணமாக ,தேவையான வசதிகள் குறைவாக காணப்படுவதால் பெரியபாளையம், பவானி அம்மன் கோயில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு அடிப்படை வசதிகளைச் செய்து தர வேண்டுமென வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பக்தர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

 

Related post