உரிமம் பெறாத கடைகளில் பீடி,சிகரெட் விற்பனை தடை !

உரிமம் பெறாத கடைகளில் பீடி,சிகரெட் விற்பனை தடை !

உரிமம் பெறாத கடைகளில் பீடி,சிகரெட் விற்பனை தடை .தேநீர் கடைகள், மளிகை கடைகள் மற்றும் சிறிய சிறிய பெட்டி கடைகளில் பீடி,சிகரெட் விற்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. உரிமம் உள்ள கடைகளில் மட்டும்  புகையிலை சம்பந்தமான பீடி ,சிகரெட் விற்பனை செய்ய முடியும் எனச் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும்   18 வயதிற்கு உட்பட்ட சிறார்களுக்கு இவ்வித புகையிலை வழங்கக் கூடாது என்று கடுமையாக எச்சரித்துள்ளது. உலகளவில் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா தான் பீடி,சிகரெட்டை அதிகமாக உற்பத்தி செய்கிறது. இதனால் 20 கோடிக்கு மேலானோர் புகையிலை பழக்கத்திற்கு அடிமையாகி விடுகின்றனர் எனச் சுகாதாரத்துறை ஆய்வு மேற்கொண்டதில் தகவல்களை வெளியிட்டுள்ளது. எம்.ஜி.எம் மருத்துவமனை நிபுணர்கள் நாட்டில் 90 சதவீத ஆண்கள் புகையிலை பயன்படுத்துவதால் உடல் நலிவுற்று அவர்களின் பணி திறன்  பாதிக்கப்படுகிறது.

ரேவா மருத்துவமனை நுரையீரல் நிபுணர்களும் தங்களிடம் வரும் நுரையீரல் அடைப்பு நோயில் சம்பந்தப்பட்டவர்கள் 70% பேர் புகையிலைக்கு அடிமையாகி உள்ளனர் எனத் தெரிவித்துள்ளார். இதனால் இந்தியாவில் புகையிலையால் ஏற்படும் நோய்களுக்கு ஆண்டுக்கு 15 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உயிரிழக்கிறார்கள் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் புகையிலை பயன்பாட்டால் நாட்டின் பொருளாதாரத்திற்கு 1.6 லட்சம் கோடி உற்பத்தி இழப்பீடு ஏற்படுகிறது. சர்வதேச புகையிலை ஒழிப்பு தினம் உலகம் முழுவதும் (மே31)கடைபிடிக்கப்பட்டு வருகிறது. எனவே புகையிலை  குறைப்பதற்காக சுகாதாரத்துறை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

Related post

தமிழ்நாட்டில் மாஞ்சா நூல் தடை விதிப்பு தமிழக அரசாணை உத்தரவு !

தமிழ்நாட்டில் மாஞ்சா நூல் தடை விதிப்பு தமிழக அரசாணை உத்தரவு !

தமிழ்நாடு முழுவதும் மாஞ்சா நூலுக்குத் தடை விதித்து தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது.. தமிழ்நாட்டில் மாஞ்சா நூலை தயாரிக்கவும், பயன்படுத்தவும் தமிழக அரசு தடை செய்துள்ளது. காத்தாடி விடுவதற்காக…
நாமக்கல்லில்  கிரில் சிக்கன்,ஷவர்மா  விற்க  தடைவிதிப்பு!

நாமக்கல்லில் கிரில் சிக்கன்,ஷவர்மா விற்க தடைவிதிப்பு!

நாமக்கல் மாவட்டத்தில்  பரமத்தி சாலையில்  உள்ள தனியார் உணவகத்தில் கடந்த சனிக்கிழமையில் சவர்மா வாங்கி சாப்பிட்ட  கலையரசி என்கிற ஒன்பதாம் வகுப்பு மாணவி நேற்று மாலை உயிரிழந்துள்ளார். மேலும்…
வெளிநாடுகளுக்கு அரிசி ஏற்றுமதிக்கு  தடை – மத்திய அரசு உத்தரவு !

வெளிநாடுகளுக்கு அரிசி ஏற்றுமதிக்கு தடை – மத்திய அரசு உத்தரவு !

இந்தியாவிலிருந்து வெளிநாடுகளில் அனுப்பப்படும் அரிசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை  உத்தரவினைப் பிறப்பித்துள்ளது. எனவே பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசியினை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை…