இ- சிகரெட்டை தடை- மத்திய சுகாதாரத்துறை எச்சரிக்கை! இ சிகரெட் விற்கப்படுவதை நிறுத்த வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியோ தெரிவித்துள்ளார். 2019 ஆம் ஆண்டு இ கிரிக்கெட் தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தடை செய்யப்பட்ட இ- சிகரெட்டை தயாரிப்பது விற்பனை செய்வது பதிக்கி வைப்பது போன்ற செயல்களைப் பல்வேறு இணையதளங்கள்செய்து வருகிறது. எனவே சிகரட்டை விநியோகம் செய்யும் 15 இணையதளங்களும், தங்களின், தயாரிப்பும் விளம்பரமும் விற்பனையை நிறுத்த வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இணையதளங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி வைத்துள்ளது. நோட்டீஸ் அனுப்பிய 36 மணி நேரத்தில் நான்கு இணையதளங்கள் நிறுத்தி வைத்துள்ளன.
மீதமுள்ள 11 இணையதளங்களும் எவ்வித பதிலும் அளிக்கவில்லை. எனவே இ சிகரெட் விற்பனை செய்யும் இணையதளங்களுக்கு எலக்ட்ரானிக் சிகரெட் தடைச் சட்டத்தின் கீழ் அபராதம் விதிக்கப்பட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக மாநில சுகாதார அமைச்சர்களுக்கு மத்திய சுகாதாரத் துறை அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஈ சிகரெட்டை விற்பனை செய்பவர் மீது. (www. Violation. reporting. In) புகார் அளிக்கலாம் என மத்திய சுகாதாரத்துறை தகவலைத் தெரிவித்துள்ளது.