சென்னை மாநகராட்சி பள்ளிகளில் நடத்தப்பட்ட அறிவியல் மற்றும் திறன் மேம்பாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ – மாணவிகளை இலவச கல்வி சுற்றுலாவாக துபாய் அழைத்துச் செல்ல இருக்கிறார்கள். அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கல்வி தரத்தினை உயர்த்திட பல நலத்திட்டங்கள் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது..2022-2023 கல்வியாண்டில் தொழில் முனைவோர் திறன் மேம்பாட்டு என்ற தலைப்பில் மூன்று நிலைகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. சுமார் 10,000 மாணவர்கள் பங்கேற்ற நுழைவு தேர்வில் 478 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களின் பல நிலைகளில் போட்டிகள் நடத்தப்பட்டு இறுதியாக 9 மாணவ -மாணவியர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
மாணவர்களின் திறனை ஊக்குவிக்கும் வகையில் இலவச சுற்றுலாவாக ஐந்து நாட்களுக்கு இலவசமாக துபாய்க்கு அழைத்து செல்லப்படுகிறார்கள். இந்த 9 மாணவ மாணவிகளை ரிப்பன் மாளிகையில் வரவழைத்து மேயர் ப்ரியா நினைவுபரிசுகள் மற்றும் ஊக்கத் தொகைகளை வழங்கி பாராட்டினார். இதைத்தொடர்ந்து துபாயில் உள்ள முக்கிய இடங்களான புர்ஜ்கலிபாவிற்றுக்கு செல்ல இருப்பதாகவும் பாலைவனத்தில் ஒட்டக சவாரி செய்ய விரும்புவதாகும் உற்சாகத்துடன் வெற்றி பெற்ற மாணவர்கள் தெரிவித்தனர். மேலும் “கல்வி அறிவும் விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் இருந்தால் மட்டும் போதும் உலகம் மட்டும் இல்லாமல் நிலவில் சென்று கூட சாதனை செய்ய முடியும்” என வெற்றி பெற்ற சென்னை மாநகராட்சி மாணவ – மாணவிகள் தெரிவித்தனர்.