இயக்குநர் விக்னேஷ் சிவன் எல்ஐசி திரைப்படத்தை இயக்குகிறார்!

இயக்குநர் விக்னேஷ் சிவன் எல்ஐசி திரைப்படத்தை இயக்குகிறார்!

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் LIC திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்குகிறார். எல் ஐ சி திரைப்படத்தில் தெலுங்கு நடிகையான கீர்த்தி செட்டி கதாநாயகியாக நடித்து வருகிறார். எஸ் ஜே சூர்யா ,சீமான் ,மிஷ்கின் யோகி பாபு என முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்தத் திரைப்படத்திற்குப் பலமாக அனிருத் இசையமைக்கிறார். இந்தத் திரைப்படத்தை ரவுடி பிக்சர்ஸ் செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ தயாரிக்கிறது.

கடந்த மாதம் பூஜை தொடங்கப்பட்டது. தொடர்ந்து சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளிலும் எல் ஐ சி திரைப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு காட்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.இதனைத் தொடர்ந்து ஏப்ரல் 14-ஆம் தேதி எல் ஐ சி திரைப்படத்தின் டீசர் வெளியாகும்என
படக்குழு தெரிவித்துள்ளது.

Related post