சர்வதேச பெண் குழந்தைகள் தினம் இன்று உலகம் எங்கும் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் இன்று அக்டோபர் 11ஆம் தேதி சர்வதேச பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. 2011 ஆம் ஆண்டு முதல் பெண் குழந்தைகள் தினம் தொடங்கப்பட்டு ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்பட்டு வருகிறது. சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை கொண்டாடும் வகையில் ஐக்கிய நாடுகள் சபையும் பிற அமைப்புகளும் பெண் குழந்தை திருமணம் ,குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள், கல்விக்கான அணுகுமுறைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.
அந்த வகையில் இன்று கோவையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சர்வதேச பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைமையில் பள்ளி மாணவர்கள் உறுதிமொழியை எடுத்துக்கொண்டு ,இனிப்புகளைப் பெற்றுக் கொண்டனர் . மேலும் பெண் குழந்தைகளுக்கான சுதந்திரத்தையும், உரிமையும் ,கல்வி குறித்து விழிப்புணர்வும் நடைபெற்றது. பெண் குழந்தையின் முன்னேற்றத்திற்காக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் பெண் குழந்தைகளைக் காப்போம் -பெண் குழந்தைகளைக் கற்பிப்போம்! என ஐக்கிய நாடு சபைகள் மற்றும் பிற அமைப்புகள் அறிவுறுத்தி வருகிறது.