இந்திய ரயில்வே நிர்வாகம்-ரயில்வே ஓட்டுனர்களுக்கு அதிரடியான உத்தரவு!. இந்திய ரயில்வே நிர்வாகம் ரயில்வே ஓட்டுநர்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உத்தரவாக அளித்துள்ளது. இந்திய ரயில் போக்குவரத்தினைப் பாதுகாப்பதற்காக ரயில்வே நிர்வாகம் பல அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சென்ற வாரம் ஒரிசாவில் மூன்று ரயில்கள் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் மிகப் பெரியளவில் கோர விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியது.
எனவே ரயில்வே நிர்வாகம் ரயில் போக்குவரத்தின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக பல்வேறு முக்கிய முன்னெச்சரிக்கை எடுத்துள்ளது. அதன்படி ரயில் ஓட்டுநர்களுக்கு பணியில் உள்ள போது செல்போன் மற்றும் ஸ்மார்ட் வாட்ச்களை பயன்படுத்தக் கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ரயில் ஓட்டுனரின் கவனம் மற்றும் இயக்கும் திறன் போன்றவை தொடர்ந்து சோதிக்கப்படும் என்று இந்திய ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.