கடந்த ஆண்டுகளில் தலைமைப் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் பதவியேற்று இருந்தார். வருகிற ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருடன் ராகுல் டிராவிட் அவர்களின் பதவிக்காலம் நிறைவடைகிறது. இந் நிலையில் மே 27ஆம் தேதி விண்ணப்பங்கள் அனுப்பி வைக்கப்பட்டு , இந்திய முன்னாள் வீரர்களுடன் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு பி சி சிஐ நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தியது.
இந்த ஆலோசனையின் மூலம் கொல்கத்தாவில் வீரரான கௌதம் கம்பீர் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக பதவிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனை பிசிசிஐ நிர்வாகி ஜெய்ஷா வெளியிட்டுள்ளார். இந் நிலையில் கௌதம் கம்பீர் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளதால் அவரது ரசிகப் பெருமக்கள் அனைவரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.