இந்தியாவில் 75 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கும் விழா!

இந்தியாவில் 75   ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது  வழங்கும் விழா!

இந்தியா முழுவதும் இன்று ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதியான டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளை செப்டம்பர் 5ஆம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. அந்நாளில் தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் (5.செப்டம்பர்-2023) இன்று  தேசிய நல்லாசிரியர் விருது வழங்கும் விழா டெல்லியில் விஞ்ஞான்  பவனில் நடைபெறுகிறது. இதற்காக ஆசிரியர்கள் 75 பேர் டெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.   இந்த தேசிய விருது வழங்கும் விழாவில்  தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தைச்` சேர்ந்த அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் காட்வின் வேதநாயகம் ராஜ்குமார், மற்றும் தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் எஸ். எஸ். மாலதி என்ற இரண்டு ஆசிரியர்களும்  தேசிய விருதுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

 இந்த நிகழ்ச்சியில் அரசு பள்ளி ஆசிரியர்கள்,உயர்கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள், தொழில்  திறன் மேம்பாடு சேர்ந்த ஆசிரியர்கள் என மொத்தம் 75 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இங்கு அனைவரையும் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து கலந்துரையாடி வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.  இதன் பிறகு 75 நல்லாசியர்களுக்கும்   குடியரசு தலைவர் திரௌபதி முர்மு  டெல்லியில் இன்று விருது  வழங்கி  வாழ்த்துக்களைத் தெரிவித்தார்..

Related post

தமிழகத்தில் 5 ஆசிரியர்களுக்குத் தேசிய நல்லாசிரியர் விருது!

தமிழகத்தில் 5 ஆசிரியர்களுக்குத் தேசிய நல்லாசிரியர் விருது!

 ஒவ்வொரு ஆண்டும் டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாளில் தேசிய நல்லாசிரியர் விருது வழங்கும் விழா நடைபெறும். அந்த வகையில் நேற்றைய தினம் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு டெல்லியில் விக்கியான் பவனில்…
பொதுமக்களிடையே உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு அதிகரிக்கப் வேண்டும் -குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு!

பொதுமக்களிடையே உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு அதிகரிக்கப் வேண்டும் -குடியரசுத்…

புதுடெல்லியில் ஐ எல் பி எஸ் மருத்துவ கல்லூரி நிறுவனத்தில் நேற்றைய தினம் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.இந்த விழாவில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டு கௌரவப்படுத்தப்பட்டனர் .இதை…