ஆயுத பூஜை முன்னிட்டு 2000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்- தமிழக போக்குவரத்துறை அறிவிப்பு!

ஆயுத பூஜை முன்னிட்டு 2000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்- தமிழக போக்குவரத்துறை அறிவிப்பு!

தமிழகத்தில் அக்டோபர் 11, 12 விஜயதசமி விழா கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் விஜயதசமி, ஆயுத பூஜை விழாவை முன்னிட்டு வெள்ளி ,சனி, ஞாயிறு என மூன்று நாட்களும் விடுமுறை நாட்களாக வருவதால் சென்னை கோயம்பேடு, கிளாம்பாக்கம், மாதவரம் ஆகிய பேருந்து நிலையங்களிலிருந்து 2092 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும், கூடுதலாக 500 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வரும் 10-ஆம் தேதி மட்டும் 2000 சிறப்பு பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட உள்ளன போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.எனவே சொந்த ஊர் செல்லும் பயணிகள், நீண்ட தூரம் பயணம் செய்யக்கூடியவர்கள் விரைவாக முன்பதிவு செய்து பயணம் மேற்கொள்ளலாம் என்று போக்குவரத்துறை தெரிவித்துள்ளது.

 

Related post

தமிழ்நாட்டில் சரஸ்வதி பூஜை,ஆயுத பூஜையை முன்னிட்டு கூடுதலாக 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்

தமிழ்நாட்டில் சரஸ்வதி பூஜை,ஆயுத பூஜையை முன்னிட்டு கூடுதலாக 500 சிறப்பு பேருந்துகள்…

தமிழ்நாட்டில் சரஸ்வதி பூஜை ஆயுத பூஜையை முன்னிட்டு கூடுதலாக 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனத் தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வருகிற அக்டோபர் 23 ,24…