தமிழகத்தில் ஆடி மாத கிருத்திகை (ஆகஸ்ட் 9 தேதி) மிகக் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ஆடி கிருத்திகை தமிழகம் முழுவதும் உள்ள முருகப்பெருமான் ஆலயங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. ஆறுபடை வீடுகளில் ஒன்றான முருகர் கோயில் திருத்தணி திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இக்கோயிலில் பக்தர்கள் பால்குடம் எடுத்தும், காவடி எடுத்தும்,நேர்தி கடன் செலுத்தியும் முருகனை வழிபட்டனர். திருத்தணி முருகர் கோயிலில் நேற்று தெப்ப உற்சவம் மிகச்சிறப்பாக நடைபெறுகிறது.
இதே போன்று திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகர் கோயிலிலும் ஆடி மாத கிருத்திகை முன்னிட்டு காலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூட்டம் அலைமோதினர்.கேரளா ,கர்நாடகா போன்ற மாவட்டங்களிலும் முருகன் கோயிலில் சிறப்பு வழிபாடுகள், ஆராதனைகள் நடைபெற்றன . இந்த மாதம் ஆடி கிருத்திகை காலை 7.30 மணியளவில் இருந்து மறுநாள் காலை 7.30 மணியளவில் வரை நடைபெற்றதால் அனைத்து கோயில்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதின.