இந்தியா மற்றும் நோபாளம் இரு அணிகளுக்கு இடையே ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்றைய தினம்(4.9.2023)நடைபெற்றது. கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படியே நேபாளம் அணி 230 ரன்கள் எடுத்து, இறுதியாக 48.2 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து ஆட்டத்தை முடித்தது. இந்திய அணியின் ஜடேஜா வீசிய சிறந்த பந்துவீச்சால் நேபாள அணி ஆட்டக்காரர்கள் விக்கெட்டுகளில் வீழ்த்தப்பட்டனர்.
இரண்டாவதாக களமிறங்கிய இந்திய அணி தொடக்க வீரர்களான கேப்டன் ரோகித் சர்மா மற்றும் ஷூப்பான் கில் ஆட்டத்தினைத் தொடங்கினர். இதை தொடர்ந்து 2.1 ஓவர்களில் 17 ரன்கள் எடுத்த போது மழை பெய்து ஆட்டம் தடைப்பட்டது. இதன் பிறகு டக்வோர்த் விதிப்படி 23 ஓவர்களில் 145 ரன்கள் எடுக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த இலக்கினை நோக்கி விளையாடிய இந்திய அணி அசாதாரணமாக அடித்து 146 ரன்கள் அடித்து தூள் கிளப்பி அபார வெற்றி பெற்றுள்ளது.