அரசு பள்ளி மாணவர்களுக்கான பாடப் புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன. தமிழகத்தில் வரும் ஜூன் ஏழாம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகின்றன. 2023-24 கல்வியாண்டில் தமிழ் நாடு பாடநூல் கழகம் சார்பில் 4.12 கோடி பாடப் புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன. இதில் 3 கோடி பாடப்புத்தகங்கள் மாணவ மாணவிகளுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளன. மேலும் 1.12 கோடி பாடப் புத்தகங்கள் விற்பனைக்காக உள்ளன. விற்பனைக்கான பாடப் புத்தகங்களை வாங்குவோர் பள்ளி கல்வித்துறை டி. பி.ஐ வளாகம் கோட்டூர் புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பெற்றுக் கொள்ளலாம் எனத் தமிழக பாடநூல் கழகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஏப்ரல் 10 தேதி முதல் 68 கோடி ரூபாய் மதிப்பில் பாடப் புத்தகங்கள் தனியார் பள்ளிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன. பள்ளிகள் திறக்கப்படும் முதல் வாரத்திலேயே 1 முதல் பத்தாம் வகுப்பு வரையிலான அச்சடிக்கப்பட்ட புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன. மேலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு காலணிகள், புத்தகப் பைகள்,வண்ண கலர் பென்சில்கள் மற்றும் சீருடை சட்டைகள் அடுத்தடுத்ததாக வழங்கப்படும் எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.