அமெரிக்காவில் சுவாமி நாராயண அக்ஷர்தாம் கோயில் வருகிற அக்டோபர் 18ஆம் தேதி பார்வையாளர்களுக்காக திறக்கப்பட உள்ளது. இது உலகிலேயே மிகப்பெரிய இரண்டாவது இந்து கோயிலாக மிகப் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது. இக்கோயிலின் கட்டமைப்பு பணி அமெரிக்காவில் நியூ ஜெர்சியில் 183 ஏக்கர் பரப்பளவில் 2011 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 2023 இந்த வருடம் 12ஆயிரத்திற்கு மேற்பட்ட இந்திய சிற்ப கலைஞர்களால் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இக்கோயிலுக்கு 12 ஆயிரத்துக்கு மேற்பட்ட தன்னால்வர்கள்கள் தொண்டு வழங்கப்பட்டுள்ளது. இக் கோயிலில் கட்டப்பட்ட கற்களில் சுண்ணாம்பு, இளஞ்சிவப்பு மணற்கல், பளிங்கு மற்றும் கிரானைட் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது..
மேலும் கடினமான வெப்பத்தையும் குளிரையும் தாங்க கூடியளவில், ஆயிரம் வருடங்கள் தாங்கும் குவி மாடமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.. கோயிலில் பத்தாயிரம் சாமி சிலைகள், ஒன்பது கோபுரங்கள் ,பிரமிடுகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. அக்ஷர்தாம் கோயில் உலகிலேயே மிக பெரியதான இரண்டாவது இந்து கோயிலாக அமெரிக்காவில் மிகப்பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது.