மத்திய கிழக்கு பகுதியில் அமைந்துள்ள இஸ்லாமிய நாடான அபிதாபியில் மிகப் பிரம்மாண்டமான இந்து கோயில் திறக்கப்பட உள்ளது. இக்கோயில் 27 ஏக்கரில் ரூபாய் 888 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. இக்கோயிலை உலகளாவிய கட்டமைப்பான பாப்ஸ் (BAPS) அமைப்பு கட்டமைத்துள்ளது.இக்கோயிலின் கும்பாபிஷேக விழாவிற்குத் தலைமை தாங்குவதற்காக உலகளாவிய இந்து ஆன்மீக தலைவர் மஹந்த் சுவாமி மகராஜ் அபிதாபிக்குச் சென்றடைந்தார்.
இவரை அரசு சார்பாக உற்சாகமாக வரவேற்றனர். இதைத்தொடர்ந்து அபிதாபியில் பிப்ரவரி 14-ஆம் தேதி இந்து கோயில் பிரதமர் மோடியின் தலைமையில் திறக்கப்பட உள்ளது. இந்நிலையில் நாட்டு மக்கள் மத நல்லிணக்க விழா எனக் கொண்டாடி வருகின்றனர்.மேலும் இந்த விழாவில் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.