சென்னை அண்ணா பல்கலைக்கழகம் கிண்டியில் இயங்கி வருகிறது. அண்ணா பல்கலைக்கழகத்தில் பழைய கட்டணமே வசூலிக்கப்பட்டு வருகிறது. தற்போது சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இளநிலை ,முதுநிலை படிப்புகள் படிக்கும் மாணவர்களுக்கான தேர்வு கட்டணம் 50 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் பல கல்லூரிகளும் இயங்கி வருகின்றன. இதில் ஒரு லட்சத்திற்கு மேலான மாணவர்கள் பயின்று வருகின்றன. அண்ணா பல்கலைக்கழகத்தின் இளநிலை படிப்புகளுக்கான ஒரு தாளுக்கு ரூ 150 முதல் 225 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும் முதுநிலை படிப்புகளுக்கான தேர்வுத்தாள் ரூ 450 லிருந்து 650 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் இறுதியாண்டு இளநிலை படிப்புகளுக்கான ப்ராஜெக்ட் தேர்வு கட்டணம் ரூ 300 லிருந்து 600 ஆக உயர்த்தப்பட்டுள்ளது .இறுதியாண்டு முதுநிலை ப்ராஜெக்ட் தேர்வு கட்டணம்( 600 இருந்து 900 ஆக) உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் டிகிரி சான்றிதழ் பெறுவதற்கான கட்டணம் 1000லிருந்து 1500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது நடத்தப்படும் செமஸ்டருக்கு கட்டண உயர்வு இல்லை என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.