சென்னை அண்ணா அறிவாலயத்தில் கலைஞரின் வரலாற்று சிறப்பு புகைப்படக் கண்காட்சி திறக்கப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அவர்களின் நினைவுகளைப் போற்றும் வகையில் ,1934 ஆம் ஆண்டிலிருந்து அவர் பொதுமக்களுக்கும் தமிழுக்கும் செய்த தொண்டுகளையும் சாதனைகளையும் நினைவூட்டும் வகைகளிலும் கலைஞர் வரலாற்று சிறப்பு புகைப்படக் கண்காட்சி நேற்றைய தினம் வியாழக்கிழமை தொடங்கப்பட்டது. இதனை திமுக பொருளாளர் டி ஆர் பாலு திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் தலைமை நிலையச் செயலாளர்கள் பூச்சி எஸ்.முருகன், துறைமுகம் காஜா, துணை அமைப்புச் செயலாளர்கள் ஆஸ்டின், தாயகம் கவி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றயிருந்தனர். கலைஞரின் நூற்றாண்டு விழாவை நிறைவு செய்யும் வரலாற்று சிறப்பு மிக்க புகைப்படக் கண்காட்சி ஜூன் 3 ஆம் தேதி காலை 10 மணி முதல் 8 மணி வரை நடைபெறுகிறது. இந் நிலையில் பொதுமக்களும் இலவசமாக பார்வையிடலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது..