ஐ.பி.எல் போட்டி மார்ச் 31 ஆம் தேதி தொடங்கப்பட்டு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. ஏப்ரல் 18ஆம் தேதி அன்று நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ், ஹைதராபாத் சன் ரைஸ் ஆகிய இருவர் இடையே போட்டிகள் நடத்தப்பட்டது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சன் ரைஸ் ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.. மும்பை இந்தியனின் கேப்டனான ரோகித் சர்மா தொடக்கத்திலேயே அதிரடியாக ஆடத் தொடங்கினார். மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் ,192 ரன்களை, 5 விக்கெட் என ஆட்டத்தினை முடித்தது. பின்னர் இரண்டாவதாக ஆடிய ஹைதராபாத் அணி ஆட்டத் தொடக்கத்திலேயே அதிகமான விக்கெட்டுகளை எடுத்து தோல்வியுற்றது.
ஐ.பி.எல் தொடரில் ஹைதராபாத் அணிக்கு எதிராக விளையாடிய ரோகித் சர்மா 14 ரன்களை எடுத்து 6000 ரன்களைக் கடந்த வீரர் என்ற பெருமையை எட்டியுள்ளார் . ரோகித் சர்மா 232 போட்டியில் விளையாடி ஒரு சதம், 41 அரை சதங்கள் 6,014 ரன்களை ஐ.பி.எல் தொடரில் அடித்துள்ளார் இதற்கு முன்பு விராட் கோலி (6844) ரன்கள், ஷிகர் தவான் (6477) ரன்கள் மற்றும் டேவிட் வார்னர் (6109) ரன்களுக்கு மேலாக அடித்துள்ளனர். எனவே ஐ.பி.எல் வீரர்களின் பட்டியலில் ரோகித் சர்மா (6014) ரன்கள் எடுத்து நான்காவது இடத்தில் உள்ளார். 6000 ரன்களைக் கடந்த வீரரான ரோகித் சர்மாவிற்கு ரசிகர்களின் வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளது.