சென்னை மறைமலை நகரில் இன்று மாநில ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி நிறுவன அரங்கில் கள ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த அரங்கத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் போன்ற மாவட்டங்களின் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் வருவாய் துறை, சுகாதாரத்துறை, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இதில் முதல்வர் உரையாற்றிய தொடங்கிய போது போதை பொருளை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்றார், இதைத் தொடர்ந்து நான்கு மாவட்ட ஆட்சியர்களுடன் மாநகராட்சி சாலை பணிகள், நகராட்சி கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் குறித்தும் பணிகள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
மேலும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு பொது பயன்பாடு மின் கட்டணம் யூனிட்டுக்கு8 ரூபாயிலிருந்து 5.50 குறைக்கப்படும் என்றும், நாவலூர் சாலையில் சுங்க கட்டணம் வசூலிக்கப்படாது என்றும் கள ஆய்வு கூட்டத்தில் திட்டவட்டமாக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.