ஃபோர்டு தொழிற்சாலையை நிறுவ தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவு!

ஃபோர்டு தொழிற்சாலையை நிறுவ தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவு!

 தமிழகத்தில் கார் நிறுவனமான ஃபோர்டு தொழிற்சாலை பிரபலமான நிறுவனங்களில் ஒன்றாகும். ஃபோர்டு நிறுவனம் தமிழகத்தில் சென்னை அடுத்ததாக மறைமலை நகரில் 1996 நிறுவப்பட்டது .தற்போது இந்தச் சூழலில் நஷ்டம் ஏற்பட்டதாக கூறி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு (2021-ம் ஆண்டு) இந்தியாவில் கார் நிறுவனமான உற்பத்தியைப் போர்டு நிறுவனம் நிறுத்திக் கொண்டது. தற்போது கடந்த 10 ஆம் தேதி ஸ்டாலின் அவர்கள் தமிழக முதலமைச்சர் வெளிநாடுகளின் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டார் அப்போது நடைபெற்ற சந்திப்பு காரணமாக வெளிநாட்டு நிறுவனமான போர்த் தொழிற்சாலையை நிறுவ ஒப்பந்தம் கையகமாயிற்று.

மறைமலை நகர் தொழிற்சாலையை மீண்டும் இயக்குவதற்கான இசைவு ஆணையை புதுப்பித்து தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது. மேலும் ஆலையின் இயக்க இசைவு ஆணை, கடந்த மார்ச் மாதத்துடன் காலாவதியான நிலையில், 2028 மார்ச் 31-ஆம் தேதி வரை ஆணை புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம்மக்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

 

Related post