ஹிட்லிஸ்ட் படத்தில் அதிரடி வில்லனாக கௌதம் வாசுதேவ் மேனன்!

ஹிட்லிஸ்ட் படத்தில் அதிரடி வில்லனாக கௌதம் வாசுதேவ் மேனன்!

ஹிட்லிஸ்ட் படத்தில் அதிரடி வில்லனாக கௌதம் வாசுதேவ் மேனன்! மின்னலே படத்தின் மூலம் இயக்குனராக கௌதம் வாசுதேவ மேனன் காக்க காக்க ,வாரணம் ஆயிரம் மற்றும் வேட்டையாடு விளையாடு போன்ற வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார். தற்போது பிரபல இயக்குனர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா ‘ ஹிட்லிஸ்ட் ‘ படத்தில் நடித்து வருகிறார். சித்தாரா, முனிஸ் காந்த், ஸ்மிருதி வெங்கட், பால சரவணன், கே.ஜி.எஃப் படத்தில் நடித்த கருடா ராமச்சந்திரா போன்றோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தில் கௌதம் வாசுதேவ் மேனன் பயங்கரமாக வில்லனாக நடித்து வருகிறார். கே.எஸ். ரவிக்குமார் தயாரிப்பு நிறுவனமான ஆர்.கே.செல்லுலாய்ட்ஸ் நிறுவனம் ‘ ஹிட்லிஸ்ட் ‘படத்தைத் தயாரித்து வருகிறது. கே.எஸ்.ரவி குமாரின் உதவி இயக்குனரான சூரிய கதிர், கார்த்திகேயன் படத்தினை இணைந்து இயக்கியுள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்புகள் ராம்சரண் ஒளிப்பதிவில் உருவாக்கப்பட்டுள்ளன. குடும்ப கதாபாத்திரங்கள் கொண்ட ஆக்சன் திரில்லராக கௌதம் வாசுதேவன் மேனன் அதிரடியான வில்லனாக ‘ ஹிட்லிஸ்ட் ‘ படத்தில் நடித்து வருகிறார்.  மேலும் இந்தப் படத்தின் பணிகள் இறுதி கட்ட முடிவில் இருப்பதாக தகவல்கள் வலைத்தளங்களில் வெளியாகி வருகின்றன.

Related post