ஹாரிஸ் ஜெயராஜின் ROCK ON HARRIS இசை நிகழ்ச்சி கோலாகலம்!

ஹாரிஸ் ஜெயராஜின் ROCK ON HARRIS  இசை நிகழ்ச்சி கோலாகலம்!

இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் ‘ROCK ON HARRIS’ இசை நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. சென்னையில் நேற்றைய தினம்(28.10.2023) வெள்ளிக்கிழமை மாலை ஹாரிஸ் ஜெயராஜ் நிகழ்ச்சி நந்தனம் ஓய் எம் சி ஏ மைதானத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்காக 15 ஆயிரம் டிக்கெட்கள் விற்பனை செய்யப்பட்டு 20 ஆயிரம் பார்வையாளர்கள் பங்கேற்றனர். பார்வையாளர்களுக்கான அடிப்படை , இருக்கை வசதிகள் நேர்த்தியாக செய்யப்பட்டிருந்தது.கடந்த மாதம் நடைபெற்ற ஏ ஆர் ரகுமானின் இசை நிகழ்ச்சியின் குளறுபடி காரணமாக இந்நிகழ்ச்சி பல கட்டுப்பாடுகளுடனும்நிபந்தைகளுடனும் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியை எடுத்து நடத்தும் நாய்ஸ்& கிரெய்ன்ஸ் நிறுவனத்தால் காவல்துறை அதிகாரிகளுடன் பலத்த கட்டுப்பாடு போடப்பட்டு இசை நிகழ்ச்சி நேர்த்தியாக நடைபெற்றது. . இந்நிகழ்ச்சியில் முக்கிய பிரபலங்கள் பலர் கலந்து கொண்டிருந்தனர் .மேலும் இந்நிகழ்ச்சியில் இயக்குனர் ஜி வி எம் ,கீர்த்தி சுரேஷ் போன்றோர் நடனமாடி சிறப்பித்தனர் . இதை தொடர்ந்து ஹாரிஸ் ஜெயராஜ் தனது இசையோடு நடனமாடி ரசிகர்களை மகிழ்வித்தார்.

Related post