ஸ்குவாஷ் 4ஆவதுஉலகக் கோப்பை போட்டி – உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார் !

ஸ்குவாஷ் 4ஆவதுஉலகக் கோப்பை போட்டி – உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார் !

ஸ்குவாஷ் 4ஆவது உலகக் கோப்பை போட்டியை உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னையில் ஸ்வாஷ் 4ஆவது உலகக் கோப்பை போட்டியை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.  இந்த வருடம் 2023 ஸ்வாஷ் போட்டி (ஜூன் 12) சென்னை ராயப்பேட்டையில் எக்ஸ்பிரஸ் அவென்யூ மைய வளாகத்தில் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஸ்குவாஷ்போட்டியைத் தொடங்கி பேசிய அவர் 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் போட்டி தமிழகத்தில் நடைபெறுவது சிறப்பு என்றார்.

இந்தப் போட்டியை சிறப்பாக நடத்துவதற்கு அனைத்து உதவியும் வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றியைத் தெரிவித்தார். இந்தப் போட்டியில் இந்தியா உள்பட எட்டு நாடுகளிலிருந்து வீரர்கள் கலந்து கொள்கிறார்கள். நான்காவது உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டி (ஜூன் 13) இன்றுசெவ்வாய்க்கிழமை தொடங்கி 17ஆம் தேதி வரை நடைபெறுகிறது.  இதன்படி ஏ பிரிவில் எகிப்து ஆஸ்திரேலியா, கொலம்பியா,மலேசியா ஆகிய அணிகளும், பி பிரிவில் இந்தியா, ஜப்பான்,தென் ஆப்பிரிக்கா, ஹாங்காங் போன்ற அணிகளும் பங்கேற்கின்றனர்.

Related post

ஈரோட்டில் நடை பெற்ற அரசு விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பல நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

ஈரோட்டில் நடை பெற்ற அரசு விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பல…

 ஈரோட்டில் மொடக்குறிச்சி சோலார் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் அரசு விழா இன்று நடைபெற்றது .இந்நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பல நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மகளிர்…
மாமன்னன் ஃபர்ஸ்ட் லுக் மாஸ் போட்டோ  இன்று   வெளியீடு!

மாமன்னன் ஃபர்ஸ்ட் லுக் மாஸ் போட்டோ இன்று வெளியீடு!

உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் மாமன்னன் திரைப்படம் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.  மாமன்னன் திரைப்படம் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் வலம் வருகிறார். வடிவேலுடன் …