வைட்டமின் சத்துக்கள் நிறைந்த ஊதா நிற ஆவின் பால் விற்பனை – இன்று துவக்கம்!

வைட்டமின் சத்துக்கள் நிறைந்த ஊதா நிற ஆவின் பால் விற்பனை – இன்று துவக்கம்!

வைட்டமின் சத்துக்கள் நிறைந்த ஊதா நிற ஆவின் பால் விற்பனை – இன்று துவக்கம். சென்னையில் ஆவின் பால் நிறுவனம் செறிவூட்டப் பட்ட வைட்டமின் (ஏ,டி) சத்துக்கள் நிறைந்த ஊதா நிற பால் பாக்கெட்டை  இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்தது. ஆவின் நிறுவனமானது தினசரி 30 லட்சம் லிட்டர் பாலை விற்பனை செய்து வருகிறது. தற்போது (மே 9)ஆம் தேதி  நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பால் மற்றும் பால் பண்ணை வளர்ச்சி துறை மானியத்தின் போது இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலை ஆணையத்தால் அனுமதிக்கப்பட்டு செறிவூட்டபட்ட  பசும்பால் பொதுமக்களிடையே விற்பனை செய்ய அறிவிக்கப்பட்டது..

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்களின் இணையங்கள் மற்றும் 27 மாவட்ட கிராமப்புறங்களில் கூட்டுறவு சங்கம் மூலம் பால் கொள்முதல் செய்யப்பட்டு சுகாதார முறையில் பதப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இந்த ஊதா நிற செறிவூட்டபட்ட பால் பொதுமக்களிடையே விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.. ஆவின் நிர்வாகம் ஊதா நிற பாலின் விலை ரூ.22 ஆக நிர்ணயம் செய்துள்ளது. மேலும் ஆவின் நிர்வாகமானது “கண் பார்வை அதிகரிக்கவும் , எலும்பு வளர்ச்சியை உறுதி படுத்தவும்,நோய் எதிர்ப்பு சக்திகளை அதிகரிக்கவும், இந்த வைட்டமின் (ஏ,டி) சத்துக்கள் அடங்கிய  ஊதா நிற பாலினை பொதுமக்களின் நலனுக்காக மக்களிடையே சென்னையில் அறிமுகபடுத்தியுள்ளது.

Related post