வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள கோபாலபுரத்தில் அருள்மிகு ஸ்ரீ கங்கை அம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது.இக்கோயிலில் ஒவ்வொரு வருடமும் வைகாசி மாதம் முதல் தேதி பிரசித்தி பெற்ற சிரசு விழா நடைபெறும். அந்த வகையில் இந்த வருடம் மே 14ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று சிலம்பாட்டம், மயிலாட்டம், புலி ஆட்டம் மற்றும் கரகாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் பம்பை, உடுக்கை, மேளதாளம் முழங்க குடியாத்தம் தரணம்பேட்டை முத்தாலம்மன் கோவிலில் இருந்து அம்மன் சிரசு விழா ஊர்வலமாக நடைபெறுகிறது .
இந்த விழாவை முன்னிட்டு கோயிலுக்குள் வேலூர் மட்டுமின்றி திருவண்ணாமலை, தர்மபுரி, மதுரை, கர்நாடகா எனப் பல்வேறு மாவட்டங்களிலிருந்து முக்கிய பிரமுகர்கள், அரசு அலுவலர்கள் பொதுமக்கள் எனப் பலரா பங்கேற்க உள்ளதால் வேலூர் மாவட்டத்திற்கு மே- 14ஆம் தேதி உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.