வெளிநாடுகளுக்கு அரிசி ஏற்றுமதிக்கு தடை – மத்திய அரசு உத்தரவு !

வெளிநாடுகளுக்கு அரிசி ஏற்றுமதிக்கு  தடை – மத்திய அரசு உத்தரவு !

இந்தியாவிலிருந்து வெளிநாடுகளில் அனுப்பப்படும் அரிசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை  உத்தரவினைப் பிறப்பித்துள்ளது. எனவே பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசியினை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்தியா உலகிலுள்ள 140 நாடுகளுக்கு அரிசி  ஏற்றுமதியை செய்து வருகிறது .உலகளாவிய நாடுகளில் அரிசி ஏற்றுமதிக்கு  40%  பங்கை  இந்தியா கொண்டுள்ளது . கடந்த 2022 ஆம் ஆண்டு 17.86 மில்லியன் டன் அரிசியை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது.  தற்போது வடமாநிலங்களில் பருவநிலை மாற்றத்தால் மழை பெய்து வருகிறது. எனவே ஒரு சில வாரங்களாக அத்தியாவசிய பொருட்களான காய்கறி ,பால், கோதுமை மற்றும் அரிசி போன்றவற்றின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இந்தப் பருவ மழை காரணமாக வட மாநிலங்களான பஞ்சாப், ஹரியானா போன்ற மாநிலங்களில் நெல் சாகுபடியில் நெல் பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது.

மேலும் மேற்குவங்கம் ,மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் நெல் விதைப்பு குறைக்கப்பட்டுள்ளது.  இதனால் கடந்த 10 நாட்களில் அரிசியின் விலை 20% அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அரிசியின் விலையை கட்டுக்குள் கொண்டு வரவும், உள்நாட்டு தேவைகளை பூர்த்தி செய்யவும் ,அரிசி ஏற்றுமதி தடை என்ற நடவடிக்கைகளை மத்திய அரசு  கொண்டுள்ளது. எனவே பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசி வகைகளை உலகளாவிய அரிசி ஏற்றுமதிக்கு தடை செய்து மத்திய அரசு     உத்தரவு  விதித்துள்ளது.

Related post

தமிழ்நாட்டில் மாஞ்சா நூல் தடை விதிப்பு தமிழக அரசாணை உத்தரவு !

தமிழ்நாட்டில் மாஞ்சா நூல் தடை விதிப்பு தமிழக அரசாணை உத்தரவு !

தமிழ்நாடு முழுவதும் மாஞ்சா நூலுக்குத் தடை விதித்து தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது.. தமிழ்நாட்டில் மாஞ்சா நூலை தயாரிக்கவும், பயன்படுத்தவும் தமிழக அரசு தடை செய்துள்ளது. காத்தாடி விடுவதற்காக…
நாமக்கல்லில்  கிரில் சிக்கன்,ஷவர்மா  விற்க  தடைவிதிப்பு!

நாமக்கல்லில் கிரில் சிக்கன்,ஷவர்மா விற்க தடைவிதிப்பு!

நாமக்கல் மாவட்டத்தில்  பரமத்தி சாலையில்  உள்ள தனியார் உணவகத்தில் கடந்த சனிக்கிழமையில் சவர்மா வாங்கி சாப்பிட்ட  கலையரசி என்கிற ஒன்பதாம் வகுப்பு மாணவி நேற்று மாலை உயிரிழந்துள்ளார். மேலும்…
இ- சிகரெட் தடை-  மத்திய சுகாதாரத்துறை எச்சரிக்கை!

இ- சிகரெட் தடை- மத்திய சுகாதாரத்துறை எச்சரிக்கை!

இ- சிகரெட்டை தடை-  மத்திய சுகாதாரத்துறை எச்சரிக்கை! இ சிகரெட் விற்கப்படுவதை நிறுத்த வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியோ தெரிவித்துள்ளார். 2019 ஆம் ஆண்டு…