வெம்பக்கோட்டையில் தீ தொண்டு நாள் வார விழா கொண்டாடப்படுகிறது!

வெம்பக்கோட்டையில் தீ தொண்டு நாள் வார விழா கொண்டாடப்படுகிறது!

 வெம்பக்கோட்டையில் தீ தொண்டு நாள் வார விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. தனது உயிரையும் பாரபட்சம் பார்க்காமல் தீயணைப்பு வீரர்கள் மக்களுக்காக உயிர் கொடுத்து பணி புரிகின்றனர்.இந் நிலையில் ஏப்ரல் 14 முதல் 20ஆம் தேதி வரை தீ தொண்டு வார விழா கொண்டாடப்படுகிறது . மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை விக்டோரியா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த கப்பலில் 1994ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்க கடுமையாக தீயணைப்புத் துறையினர் போராடினர். 

இந் நிலையில் கப்பலில் இருந்த வெடிப்பொருள்கள் வெடித்து சிதறியதால் மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு வீரர்கள் 66 பேர் உயிரிழந்தனர். ஒவ்வொரு வருடமும் அவர்களின் தியாகங்களைப் போற்றும் வகையில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது .இந்த வாரம் இந்தத் தீயணைப்பு வீரர்களின் நினைவாக வெம்புக்கோட்டையில் தீ தொண்டு நாளவார விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

 
 

Related post