விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி திருத் தேரோட்டம் கோலாகலம்!

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி திருத் தேரோட்டம் கோலாகலம்!

 விழுப்புரம் மாவட்டத்தில் அங்காள பரமேஸ்வரி மேல்மலையனூர் கோயில் பிரசித்தி பெற்ற மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் வருடாந்திர மாசி பெருவிழா மிக விமரிசையாக நடைபெறும். இக்கோயிலில் மாசி பெருவிழா மகா சிவராத்திரி (8.3.2024 அன்று தொடங்கி 20.3.2024 )தேதி வரை மிக விமர்சையாக நடைபெறுகிறது. 

மகா சிவராத்திரி, மயான கொள்ளை ,தீ மிதித்தல், திருத்தேர் விழா ,தெப்பல் உற்சவம் ,சத்தராபரணம் போன்ற முக்கிய நிகழ்ச்சிகளும் 13 நாட்களும் மிக விமரிசையாக நடைபெறுகிறது. மாசி பெரு விழாவிற்கு மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி திருத்தேரோட்ட விழா இன்று நடைபெறுவதால் விழுப்புரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை என்று மாவட்ட கலெக்டர் பழனி அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

Related post