விருதுநகர் மாவட்டம் சதுரகிரி மலை கோவிலுக்குப் பக்தர்கள் செல்ல அனுமதி!.

விருதுநகர் மாவட்டம் சதுரகிரி மலை கோவிலுக்குப் பக்தர்கள் செல்ல அனுமதி!.

கோடை விடுமுறை என்பதால் விருதுநகர் மாவட்டம் சதுரகிரி மலையில் சிவன் கோயிலுக்குப் பக்தர்கள் ஏராளமாக வருகின்றனர். இந் நிலையில் வைகாசி மாத பிரதோஷம் மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு வருகிற (மே 20-ஆம் தேதி முதல் மே24-ஆம் தேதி வரை) 5 நாட்கள் மலை ஏறி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வனத்துறை மற்றும் கோயில் நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. 

இக்கோயிலில் மலையேறி வருபவர்கள் எளிதில் தீப்பற்றி எரியக்கூடிய பொருட்களை எடுத்துச் செல்லக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .மேலும் இரவு நேரத்தில் சதுரகிரி மலையில் தங்குவதற்கு அனுமதி கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்களுக்குத் தேவையான குடிநீர் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் கோயில் நிர்வாகம் செய்து வருகின்றது.

Related post