விஜய் பிறந்தநாளில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் பணி தொடக்கம்!

விஜய் பிறந்தநாளில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக  பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் பணி தொடக்கம்!

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக விஜய் பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்குப் பல நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.விருகம்பாக்கம், ஆயிரம் விளக்கு, சேப்பாகம்-திருவல்லிக்கேணி பகுதியில் அன்னதானம், கோயம்பேடு ரோகினி திரையங்கம் அருகில் ரத்த தானம், கிளை அலுவலகங்கள் திறப்பு எனத் தென் சென்னை மாவட்டம் சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. 

மேலும் அம்பத்தூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு சைக்கிள், பெண்களுக்குத் தையல் இயந்திரம், பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரண பொருட்கள் உள்ளிட்ட நலத்திட்டங்களை வழங்க உள்ளனர். விஜய் அவர்களின் ஐம்பதாவது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக வெற்றி கழகத்தின் 100 உறுப்பினர்கள் கண்தானம் செய்ய முடிவு செய்துள்ளனர். நடிகர் விஜய் அவர்களின் 50 ஆவது பிறந்தநாள் தமிழகம் முழுவதும் பிரம்மாண்டமாக கொண்டாடப்படுகிறது.

Related post

தமிழக அரசின் தீர்மானத்தை வரவேற்கிறேன் -நடிகர் விஜய்!

தமிழக அரசின் தீர்மானத்தை வரவேற்கிறேன் -நடிகர் விஜய்!

 சென்னை திருவான்மியூரில் (ஜூலை 3) இன்று இரண்டாவது கட்டமாக கல்வி விருது வழங்கும் விழா நடைபெற்றது. 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தொகுதி வாரியாக…
தமிழக முழுவதும் 2 கோடி உறுப்பினர்களைச் சேர்க்க இலக்கு -நடிகர் விஜய்

தமிழக முழுவதும் 2 கோடி உறுப்பினர்களைச் சேர்க்க இலக்கு -நடிகர் விஜய்

நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி இரண்டாம் தேதி தமிழக வெற்றிக் கழகம் எனத் தனது அரசியல் கட்சியின் பெயரை அறிவித்திருந்தார் .இதை தொடர்ந்து பல அரசியல் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு…
தமிழக வெற்றி கழகம்-  நடிகர் விஜய் அறிவிப்பு !

தமிழக வெற்றி கழகம்- நடிகர் விஜய் அறிவிப்பு !

நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்று தனது அரசியல் கட்சி பெயரை அறிவித்துள்ளார். பிறப்பொக்கும் எல்லாம் உயிருக்கும் என அரசியலில் செயல்படுவேன்! என்று நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.நாடாளுமன்ற…