தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக விஜய் பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்குப் பல நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.விருகம்பாக்கம், ஆயிரம் விளக்கு, சேப்பாகம்-திருவல்லிக்கேணி பகுதியில் அன்னதானம், கோயம்பேடு ரோகினி திரையங்கம் அருகில் ரத்த தானம், கிளை அலுவலகங்கள் திறப்பு எனத் தென் சென்னை மாவட்டம் சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
மேலும் அம்பத்தூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு சைக்கிள், பெண்களுக்குத் தையல் இயந்திரம், பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரண பொருட்கள் உள்ளிட்ட நலத்திட்டங்களை வழங்க உள்ளனர். விஜய் அவர்களின் ஐம்பதாவது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக வெற்றி கழகத்தின் 100 உறுப்பினர்கள் கண்தானம் செய்ய முடிவு செய்துள்ளனர். நடிகர் விஜய் அவர்களின் 50 ஆவது பிறந்தநாள் தமிழகம் முழுவதும் பிரம்மாண்டமாக கொண்டாடப்படுகிறது.