வருமான வரி செலுத்த தவறினால் அபராதம்! வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் ஜூலை 31ஆம் தேதி முடிவடைந்து விட்டதாக வருமானவரித்துறை அறிவித்துள்ளது. (2023) நிதி ஆண்டுக்கான வருமான வரி கணக்குகளைத் தாக்கல் செய்வதற்கு கால அவகாசம் ஜூலை 31 தேதி முடிந்தடைந்து விட்டது. இறுதியாக ஜூலை 31ஆம் தேதி கடைசி நாளன்று மாலை 6:30 மணி வரை 26 லட்சத்து 76ஆயிரம் வருமானவரி கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த வருடம் 2023-இல் 6 கோடிக்கு மேற்பட்ட வருமான வரி கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. சொத்து ,நிலம் வைத்திருப்போர் மீது வருடம் தோறும் வருமான வரி வசூலிக்கப்படுகிறது. அதன்படி வருமானவரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு வழங்கப்பட்ட நிலையில் பொதுமக்களும் வரி செலுத்தி வந்தனர்.
தற்போது ஜூலை 31ஆம் தேதி வருமானவரி தாக்கல் தவறினால் ரூபாய் 5000 அபராதம் விதிக்கப்படும், மேலும் ஒருவரது வருமானம் 5 லட்சத்திற்கு மிகாமல் இருந்தால் அவருக்கு 1000ரூபாய் அபராதம் விதிக்கப்படும். 25 லட்சத்திற்கு அதிகமாக வரி செலுத்த வேண்டி இருந்தால் அவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் வரியை செலுத்தும் வரை அந்தத் தொகைக்கு ஒவ்வொரு நாளும் 200 வட்டி வசூலிக்கப்படும் என்பதையும் வருமானவரித்துறை தெரிவித்துள்ளது.