வரலாற்று வீரனாக கங்குவா படத்தில் சூர்யா!

வரலாற்று வீரனாக கங்குவா படத்தில் சூர்யா!

சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகை திஷா பதானி  கதாநாயகியாக நடிக்கிறார். அதனை தொடர்ந்து  யோகி பாபு , கோவை சரளா மற்றும் ஆனந்தராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷனஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து கங்குவா படத்தைத் தயாரிக்கின்றனர். கடந்த ஆண்டு ‘சூர்யா 42’ என்ற பெயரில் பூஜை உடன் கங்குவா படப்பிடிப்புகள் தொடங்கப்பட்டு மிகப் பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக இப்படம் உருவாகி வருகிறது. 

கோவா மற்றும் சென்னையில் படப்பிடிப்புகள் எடுக்கப்பட்டுள்ளன. தற்போது கொடைக்கானலில் படப்பிடிப்புகள் நடைபெற்று வருகின்றன.கங்குவா படத்திற்காக சூர்யா ஜிம்மில் வொர்க் அவுட் செய்து உடல் எடையை அதிகரித்து மாறியுள்ள மாஸ்லுக்கான போட்டோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன. இப்படம் 10 மொழிகளில் 3D படமாக வெளிவர உள்ளது.அடுத்த வருடம் வெளிவர இருக்கும் கங்குவா படத்தில் பிளாஷ்பேக் காட்சிகளில் சரித்திரம் படைத்த வரலாற்றுப் போர் வீரனாக சூர்யா நடித்து வருகிறார் எனத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

Related post

நடிகர் சூர்யாவின் 44ஆவது படப்பிடிப்பு தொடக்கம்!

நடிகர் சூர்யாவின் 44ஆவது படப்பிடிப்பு தொடக்கம்!

நடிகர் சூர்யா தனது 44 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தத் திரைப்படத்தினைக் கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக பூஜா ஹெக்டேக் நடித்து வருகிறார். மேலும்…
நடிகர் சூர்யா புறநானூறு திரைப்படத்தில்  நடிக்கிறார்!

நடிகர் சூர்யா புறநானூறு திரைப்படத்தில் நடிக்கிறார்!

நடிகர் சூர்யாவும் இயக்குநர் சுதா கொங்குரா புறநானூறு திரைப்படத்தில் இணைகிறார்கள். நடிகர் சூர்யா கங்குவா திரைப்படத்திற்கு அடுத்ததாக புறநானூறு திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.இந்தத் திரைப்படத்தில் துல்மர் சல்மான், நஸ்ரியா,…
நடிகர் சூர்யாவிற்குப் பாராட்டுத் தெரிவித்தார் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்!

நடிகர் சூர்யாவிற்குப் பாராட்டுத் தெரிவித்தார் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்!

நடிகர் சூர்யாவிற்குப் பாராட்டுத் தெரிவித்தார் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்.’ ‌சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சத்யதேவ் நினைவாக சத்யதேவ் லா அகடாமி (ஜூலை16 2023) நடிகர்…