வடகிழக்கு பருவமழை காரணமாக மணிமுத்தாறில் பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது!

வடகிழக்கு பருவமழை காரணமாக மணிமுத்தாறில் பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது!

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்டம் வனச்சரகப் பகுதியில் மணிமுத்தாறு அருவி அமைந்துள்ளது. இது தாமிரபரணி ஆற்றின் ஒரு கிளையாக உள்ளது. இங்கு சுற்றுலா பயணத்திற்காக பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமானோர் வருகின்றனர்.

இந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மலையில் வடகிழக்கு மழை பெய்து வருவதால் மணிமுத்தாற்றில் நீர் பெருக்கெடுத்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் சுற்றுலாப் பயணத்திற்காக வருகை புரிவதற்கும், குளிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டு அனுமதி கிடையாது என்று வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.

Related post