லாரி ஓட்டுனர்களின் கேபின்களில் ஏசி வசதி புதிய அறிவிப்பு!

லாரி ஓட்டுனர்களின் கேபின்களில் ஏசி வசதி புதிய அறிவிப்பு!

லாரி ஓட்டுனர்களின் கேபின்களில் ஏசி வசதி புதிய அறிவிப்பு லாரி ஓட்டுனர்களின் கேபின்களில் கட்டாயம் ஏசி பொருத்தப்படும் என மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி டெல்லியில் நடைபெற்ற மகேந்திரா லாஜிஸ்டிக்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பேசிய  மத்திய   அமைச்சர் நிதின் கட்கரி”லாரி ஓட்டுநர்கள் பற்றாக்குறை காரணமாக 12 மணி முதல் 16 மணி வரை லாரி ஓட்டுனர்கள் அதிக வெயிலிலும்  வேலையில் ஈடுபடுகின்றனர். தற்போது 43 முதல் 47 டிகிரி செல்சியஸ் வரை  வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. 

இந்த நிலையில் லாரி ஓட்டுனர்களின் நலன் கருதியும்,மனிதாபிமான அடிப்படையிலும் லாரி ஓட்டுனர்களின் கேபின்களில் ஏசி கட்டாயம் பொருத்தப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி  உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்தத் திட்டம் 2025 ஆம் ஆண்டுக்குள் செயல்படுத்தப்படும் என மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனால் லாரிகளின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டு அதிக விலைக்கு லாரிகள் விற்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும்  லாரி ஓட்டுனர்களின்  கேபின்களில் கட்டாயம் ஏசி பொருத்தப்படும் என்ற திட்டத்தினை லாரி ஓட்டுனர்கள் வரவேற்று வருகின்றனர்.

Related post